சிம்புவை அடுத்து விஷாலுடன் ஜோடி சேரும் மஞ்சிமா மோகன்

201607021553269497_Manjima-Mohan-Next-to-pair-with-Vishal_SECVPFகவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகியான மஞ்சிமா மோகனுக்கு பல பட வாய்ப்புகள் வந்துள்ளன.

இப்படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடிக்கவுள்ள ‘முடிசூடா மன்னன்’ என்ற படத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கவுள்ள ‘சண்டக்கோழி 2’ படத்தில் கதாநாயகியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஷால் தற்போது சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

சண்டக்கோழி முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மினும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries