4 ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் கவுதம் மேனன்

201607021434558998_4-heroes-film-directed-by-Gautham-Menon_SECVPFஇயக்குனர் கவுதம் மேனன், சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை எடுத்து வருகிறார். இப்படம் முடியும் முன்பே தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்த இரண்டு படங்களும் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது.

இந்நிலையில் கவுதம் மேனன் அடுத்த படம் இயக்க தயாராகிவிட்டார். இவர் ஒரே நேரத்தில் நான்கு தென்னிந்திய பிரபல நடிகர்களை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

கவுதம் மேனன் இயக்கவுள்ள நான்கு மொழி படம் ஒன்றில் தமிழில் ஜெயம் ரவியும், தெலுங்கில் சாய்தரம் தேஜாவும், மலையாளத்தில் பிரித்விராஜூம், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும் ஹீரோக்களாக நடிக்கவுள்ளனர்.

இந்த நான்கு ஹீரோக்களுடன் தமன்னா மற்றும் அனுஷ்கா நடிக்க இருப்பதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே கவுதம் மேனன் ஒரே நேரத்தில் நான்கு ஹீரோக்களை வைத்து இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries