எனது நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது: சாந்தினி

201607021234277339_My-performances-have-been-found-chandini_SECVPFகே.பாக்யராஜின் இயக்கத்தில் சாந்தனுவுடன் ‘சித்து+2’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. பின்னர் ‘வில் அம்பு’ உள்பட சில படங்களில் நடித்தார்.

இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமலுடன் ‘மன்னர் வகையரா’, சிபிராஜுடன் ‘கட்டப்பாவை காணோம்’, பரத்துடன் ‘என்னோடு விளையாடு’, அஞ்சனா இயக்கத்தில் ‘பல்லாண்டு வாழ்க’, நடன இயக்குனர் கவுதம் இயக்கத்தில் ‘கண்ணுல காச காட்டப்பா’, அமீர் தயாரிப்பில் ‘டாலர் தேசம்’, சந்தோஷுடன் ‘நான் அவளை சந்தித்த போது’, நவின் கிருஷ்ணா–கீர்த்தி சுரேசுடன் ‘அயனா இஷ்டம் நூவு’ என்ற தெலுங்கு படம் ஆகிய 8 படங்களில் நடித்து வருகிறார். இது பற்றி கூறிய அவர்…..

‘எனது நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பேன்’ என்றார்.

அடுத்தடுத்து பட வாய்ப்பு வருவதால் சாந்தினி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online