நடிகைகள் கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா

201607020938575581_not-continue-with-glamorous-actresses-in-cinema-Tamanna_SECVPFதமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம். அதே நேரம் கவர்ச்சியை மட்டுமே வைத்து சினிமாவில் நிலைக்க முடியும் என்று கருதினால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

கவர்ச்சியும், நடிப்பு திறமையும் இருந்தால்தான் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள முடியும். சினிமாவில் முந்தைய காலங்களில் எளிதாக நுழைய முடியாது. இப்போது அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் வரலாம்.

முதல் படத்தில்தான் அவர்களால் கஷ்டம் இல்லாமல் அறிமுகமாக முடியும். தொடர்ந்து பட வாய்ப்புகள் வர வேண்டுமானால் திறமை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓரம் கட்டி விடுவார்கள். சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் போராட வேண்டும்.

நான் சினிமாவுக்கு வந்து பல நடிகர்களுடன் நடித்து விட்டேன். மூத்த கதாநாயகர்கள், இளம் நாயகர்கள் ஜோடியாக நடித்து இருக்கிறேன். அவர்களுடன் இதுவரை எந்த கருத்து வேறுபாடோ, கசப்பான அனுபவங்களோ ஏற்பட்டது இல்லை.

எல்லோரும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறார்கள். தாங்கள் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்கள் நஷ்டப்படக்கூடாது என்ற அக்கறை எல்லா நடிகர், நடிகைகளுக்கும் இருக்கிறது. இதற்காக படம் திரைக்கு வந்து நன்றாக ஓடுவது வரை உழைக்கிறார்கள்.

முந்தைய காலங்களில் இதுபோன்று இல்லை. படத்தில் நடித்து சம்பளம் வாங்கியதோடு அடுத்த வேலைக்கு போய்விடுவார்கள். இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டு படத்தை வெற்றி பெற வைக்க இணைந்து பணி செய்கிறார்கள்.

சினிமாவில் மொழி பேதம் கிடையாது. நான் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்தி படங்களுக்கு உலக அளவில் மார்க்கெட் இருக்கிறது. தெலுங்கில் கமர்சியல் படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். தமிழில் புதுமையாகவும், வித்தியாசமான கதையம்சங்களுடனும் படங்கள் வருகின்றன.

இவ்வாறு தமன்னா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries