விஷாலுக்கு ஜோடி நானா? மஞ்சிமா மோகன் விளக்கம்

Manjima-denies-signing-Sandakozhi-2விஷால் அடுத்ததாக லிங்குசாமி இயக்கவுள்ள ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகியான மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் இந்த செய்தியை மஞ்சிமாமோகன் தற்போது மறுத்துள்ளார். ‘சண்டக்கோழி 2’ படத்தில் நான் நடிப்பது குறித்து என்னிடம் பலர் விசாரித்ததாகவும், ஆனால் இதுவரை அந்த படத்தின் குழுவினர் யாரும் தன்னை அணுகவில்லை என்றும் அந்த படத்திற்காக நான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக வந்துள்ள தகவல் முற்றிலும் வதந்தியே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை அடுத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் ஒரு படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் இந்த இரண்டு படங்களை தவிர வேறு எந்த தமிழ்ப்படத்திலும் இப்போதைக்கும் நடிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries