கபாலி ரிலீஸ் தேதி உறுதியானது

201607031456312030_Kabali-release-date-confirmed_SECVPFரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் எப்போது ரிலீஸாகும் என்பதுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. இப்படம் ரிலீசாகும் தேதி குறித்து பலரும் பல்வேறு தகவல்களை கூறி வந்தாலும், சம்பந்தப்பட்ட படக்குழுவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், ‘கபாலி’ படத்தை மலேசியாவில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ள மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் ‘கபாலி’ படம் ஜுலை 29-ந் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளது. மலேசியாவில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் மலேசியாவில் ‘கபாலி’ படம் ரிலீசாகும் தேதியை உறுதிபடுத்தியுள்ளது.

ஆனால், இந்தியாவில் இப்படம் எந்த தேதியில் வெளியாகும் என இதுவரை தெரியவில்லை. மலேசியாவில் வெளியாகும் தேதியிலேயே இந்தியாவிலும் வெளியிடப்படுமா? மலேசியாவில் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்தியாவில் வெளியிடப்படுமா? என்பது குறித்து தெரியவில்லை.

எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் கூடிய விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online