மீண்டும் தனுஷுடன் இணைந்த கருணாஸ்

201607031427460743_Karunaas-again-joint-with-dhanush_SECVPFதனுஷும், கருணாஸும் இணைந்து ‘திருடா திருடி’, ‘தேவதையை கண்டேன்’, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். தனுஷுடன் ‘பொல்லாதவன்’ படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் கருணாஸ் இணைந்து நடிக்கவில்லை.

தற்போது தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘வடசென்னை’ படத்தில் மீண்டும் தனுஷுடன் இணைந்துள்ளார் கருணாஸ். வடசென்னையை மையமாக வைத்து ஏற்கெனவே வெளிவந்த ‘பொல்லாதவன்’ படத்திலும் இவர்கள் கூட்டணி சரியாக அமைந்ததால், மீண்டும் இந்த கூட்டணியை இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் சமந்தா, ஆண்ட்ரியா என இரு நடிகைகள் நடிக்கின்றனர். சமந்தா குடிசை பகுதியில் வாழும் பெண்ணாகவும், ஆண்ட்ரியா விபச்சாரி கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online