பவர் ஸ்டாருக்காக பின்னணி இசையை மாற்றிய ரகுநந்தன்

201607031105150493_Raghunandhan-background-score-change-for-powerstar_SECVPF‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் இயக்குனர் சீனு ராமசாமியால் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் என்.ஆர்.ரகுநந்தன். முதல் படத்திலேயே ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்கிற வைரமுத்துவின் வைர வரிகளை அருமையான பாடலாக்கி அதற்கு தேசிய விருதும் பெற்றுத் தந்தவர்.

தொடர்ந்து ‘சுந்தரபாண்டியன்’, ‘நீர்ப்பறவை’, ‘மஞ்சப்பை’, ‘மாப்பிள்ளை சிங்கம்’ என அடுத்தடுத்த படங்களின் ஹிட் பாடல்களால் தனக்கான ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளவர்.

இன்றும் தென்மாவட்டங்களில் எந்த வீட்டில் விஷேசம் என்றாலும் அந்த இடத்தில் இவர் இசையமைத்த ‘சுந்தரபாண்டியன்’ பாடல்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

தற்போது திரைவண்ணன் இயக்கத்தில் சிவா, பவர்ஸ்டார், நைனா சர்வார் இணைந்து நடித்துள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை-7ஆம் தேதி படம் ரிலீசாக உள்ளது. இந்தப்படத்தில் இசையமைத்த தனது அனுபவங்கள் குறித்து என்.ஆர்.ரகுநந்தன் கூறும்போது,

இந்த படத்தில் பின்னணி இசை அமைக்க உட்காரும்போது எல்லாம் பவர்ஸ்டார்-சிவா காம்பினேஷன் என்னை தினசரி சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தது. இந்த படத்தில் பவர்ஸ்டார் திரையில் வந்தாலே நீங்கள் சிரிப்பீங்கன்னு உறுதியா சொல்வேன்.

அதிலும் குறிப்பாக முதல் பாதியில் பவர்ஸ்டார் நிறைய பஞ்ச் பேசிருக்கார். இரண்டாம் பாதியில் கொஞ்சம் சீரியசாக வேறமாதிரி மாறுவார். அதற்கேற்றமாதிரி அவருக்கான பின்னணி இசையையும் மாறும். மொத்தத்தில் இது ஒரு நல்ல காமெடிப்படம். ரெண்டுமணி நேரம் மனம் விட்டு சிரிச்சு ரசிக்கலாம் என்று கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online