எழில் இயக்கத்தில் உதயநிதி

201607041503080531_Udhayanidhi-act-in-Ezhil-Directon_SECVPFஎழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தை எடுத்தவர்களுக்கும் நல்ல லாபத்தை சம்பாதித்தனர்.

இப்படத்தை தொடர்ந்து எழில், உதயநிதியை சந்தித்து கதை ஒன்றை கூறினார். அந்த கதை பிடித்துப்போன உதயநிதி, அந்த கதையில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், அந்த படத்தை அவரே தயாரிப்பதற்கும் முன்வந்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கவிருக்கிறாராம்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘தூங்கா நகரம்’ கௌரவ் இயக்கும் புதிய படம் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் உதயநிதி, இப்படங்களுக்கு பிறகு எழில் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries