ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்

201607041244245296_again-music-director-to-hero-avatar-in-tamil-cinema_SECVPFவிஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்கள். தற்போது இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது மற்றொரு இசையமைப்பாளர் ஒருவரும் ஹீரோவாக அவதாரம் எடுக்கவுள்ளார்.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின், தற்போது பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இவரது இசையைப் போலவே இவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், சித்தார்த் விபினை வைத்து முழுக்க முழுக்க ஒரு காமெடி படம் எடுக்கலாம் என கோலிவுட்டில் சில இயக்குனர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். இதனால், சித்தார்த் விபினிடம் சென்ற பலரும் பல கதைகளை சொல்லி வருகிறார்களாம். இதில், மூன்று கதைகள் சித்தார்த் விபினுக்கு பிடித்துப் போயிருக்கிறதாம். மூன்று கதைகளில் எந்த கதையில் முதலில் நடிக்கலாம் என தற்போது பரிசீலித்து வருகிறாராம்.

இசையமைப்பாளராகவும், காமெடி நடிகராகவும் திரையுலகில் ஜொலித்து வரும் சித்தார்த் விபின், கதாநாயகனாகவும் ஜொலிப்பார் என கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இவரது இசையில் சமீபத்தில் வெளிவந்த ‘ஜாக்சன் துரை’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்படத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries