திரைவண்ணன் இயக்கத்தில் சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், நைனா சர்வார் ஆகியோர் நடித்துள்ள படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். வருகிற ஜுலை 7-ந் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை அரசு பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தற்போது படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அதன் ஒருகட்டமாக ரசிகர்களை கவரும்விதமாக போட்டி ஒன்றை நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாகவும் வழங்கவுள்ளனர். அந்த போட்டி விவரம் பின்வருமாறு:
நீங்கள் விசில் அடிக்கிற மாதிரி வீடியோ அல்லது போட்டோ எடுத்து அதை பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பதிவு செய்து #AdraMachanVisilu அல்லது @AdraMachanVisilu என்றுTag பண்ணுங்க.
தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு தலா 2 டிக்கெட்டுகள் வழங்கப்படும். இது சென்னை தியேட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த போட்டி ஜூலை 7ஆம் தேதி வரை மட்டுமே.. ஜூலை 8 முதல் டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
என்ன நீங்களும் விசில் அடிக்க ரெடியா? விசில் அடிங்க… படத்தை பாருங்க…