காஷ்மோரா டப்பிங்கை தொடங்கிய கார்த்தி

201607051854520315_Karthi-started-kaashmora-dubbing_SECVPFகார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காஷ்மோரா’. இதில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், படத்தின் டப்பிங் பணி தொடங்கியுள்ளது. இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்ட டப்பிங் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் கார்த்தி தன்னுடைய பகுதியின் டப்பிங் பணிகளை தொடங்கினார். இதையடுத்து படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருவராக டப்பிங்கை முடிக்கவுள்ளனர்.

இப்படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கார்த்தி, நயன்தாராவுடன் ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries