எனக்கு பிடித்த ஹீரோ ரஜினி: நைனா சர்வார்

201607051804566730_My-favorite-hero-Rajni-Naina-sarwar_SECVPF‘அட்ரா மச்சான விசிலு’ படத்தில் மிர்ச்சி சிவா ஜோடியாக நடித்திருப்பவர் நைனா சர்வார். இவருக்கு இது முதல் தமிழ்ப் படம். தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்……

“என் சொந்த ஊர் பெங்களூர். பி.காம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே கன்னடத்தில் 4 படங்கள் முடித்துவிட்டேன். அட்ரா மச்சான் விசிலு எனக்கு முதல் தமிழ்ப் படம் என்றாலும், இன்னொரு தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளேன். அந்தப் படம் கொளஞ்சி.

இந்த படத்தின் கதையை கேட்டபோது என் பாத்திரத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தினேன். நகைச்சுவையுடன் கூடிய ஒரு ரோல். ரொம்பப் பிடித்திருந்தது. முழுவதும் நடித்து முடித்த பிறகுதான் எனக்கு இந்தக் கதை எதைப் பற்றியது என்பது புரிந்தது. எனக்கு என் பாத்திரம் திருப்தியாக இருந்தது.

என் ஹீரோ சிவா மாதிரி ஒருவரைப் பார்க்க முடியாது. எனக்கு தமிழைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேசுவது சிரமம். அதனால் செட்டில் எல்லோருடனும் பேச சிவாதான் உதவினார்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் பவர் ஸ்டார் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருக்கும் எனக்கும் சேர்ந்த மாதிரி சீன்கள் இல்லை. அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் ஜோடியாகவும் நடிப்பேன். இதில் தயக்கம் ஏதுமில்லை.

அட்ரா மச்சான் விசிலு பாடல் புரமோ‌ஷன் பார்த்து விட்டு தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. மனசுக்குப் பிடித்த பாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன்.

தமிழில் என் பேவரைட் நாயகி நயன்தாரா. ஹீரோ ரஜினி சார் மட்டும் தான்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online