சூப்பர் ஸ்டார் ஜோடி இப்போ சிம்புவுக்கும் ஜோடி

201607051530127117_Super-star-heroine-now-simbu-heroine_SECVPFசூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் ‘ரௌத்திரம்’. இந்த படம் 2011-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதையடுத்து தெலுங்கு, கன்னட, இந்தி படங்களில் நடிக்கவே இவருக்கு வாய்ப்புகள் வந்தது. தமிழில் ‘ராஜபாட்டை’, ‘தோழா’ ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் கதாநாயகியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. சிம்பு – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு சிம்புவுக்குதான் ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார்.

சிம்பு நடிக்கும் மற்ற இரண்டு வேடங்களுக்கு கதாநாயகி தேடும் படலம் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கான இரண்டு பாடல்களை யுவன் முடித்துக் கொடுத்துள்ளார். குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries