மணிரத்னம் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி

RJ-Balaji-joins-Mani-Ratnams-next‘நானும் ரௌடிதான்’, ‘வடகறி’, ‘இது என்ன மாயம்’, ‘புகழ்’ உள்ளிட் படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. சமீபத்தில் சென்னையில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய நட்சத்திரங்களில் இவருடைய பங்கும் மகத்தானது. தனியார் எப்.எம்.மில் ஆர்.ஜே.வாக பணியாற்றி வரும் இவர் தற்போது சினிமாவிலும் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில், மணிரத்னம்-கார்த்தி இணையும் புதிய படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ஆம். நான் மணி சாருடைய படத்தில் நடிக்கவிருக்கிறேன். இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த என்னிடம் சரியாக வார்த்தைகள் இல்லை.

இருந்தாலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெளிநாட்டில் நான் விருது விழாவில் கலந்துகொண்டிருந்தபோது எனக்கு இந்த செய்தி வந்தது. அதை பார்த்தும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

சென்னைக்கு வந்ததும் மணிரத்னம் சாரை நேரில் சென்று சந்தித்தேன். அவர் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி என்னிடம் அரைமணி நேரம் விளக்கினார். அவர் கதை சொல்லும்போதே அந்த கதாபாத்திரமாக என்னை உணர முடிந்தது.

‘தளபதி’, ‘நாயகன்’, ‘அஞ்சலி’ என அவருடைய படத்தை பார்த்து வளர்ந்த எனக்கு அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய வரப்பிரசாதம். மிடில் கிளாஸ் பையனான எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்தது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாதது. எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்று கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries