மாயாவாக பயமுறுத்திய நயன்தாரா இப்போது டோராவானார்

201607051109040397_Nayanthara-new-movie-title-Dora_SECVPFநயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை அனிருத் இன்று அறிவிக்கப்போவதாக செய்திகள் நேற்று வெளிவந்தது. அது, ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்திற்குத்தான் என்று கூறப்பட்டது. அனிருத் கூறியபடி, நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

ஆனால், அந்த தலைப்பு சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடிக்கும் படத்தின் தலைப்பு கிடையாது. ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படத்தின் தலைப்பைத்தான் அனிருத் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்திற்கு ‘டோரா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக இது உருவாக உள்ளது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோர் இணைந்து இசையமைக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online