காதலில் தோல்வி அடைந்தால் வருத்தப்படக்கூடாது: காஜல் அகர்வால்

201607051008264126_Saddened-by-the-failure-of-love-Kajal-Agarwal_SECVPFநடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

இளைஞர்கள் நிறையபேர் காதல் வயப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை காதலோடுதான் நகர்கிறது. ஆனால் எல்லா காதலும் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவது இல்லை. காதலில் தோல்வி அடைந்தவர்கள் வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.

நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். அதில் இருந்து அவர்கள் மீண்டு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும்.

காதலிப்பது இயற்கையானது. ஆனால் எல்லா காதலும் திருமணம் வரை செல்வது இல்லை. சமூக பிரச்சினைகள், பெற்றோர்களின் எதிர்ப்புகள் உள்பட பல்வேறு காரணங்கள் காதலுக்கு தடையாக நிற்கின்றன. காதலிப்பதும் காதலில் தோல்வி அடைவதும் சகஜமானதுதான். காதலில் விழுந்தால் கூட நாம் யார் என்பதை மறக்க கூடாது. நமது தனித்தன்மையை இழக்கவும் கூடாது.

நம்முடைய முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் காதல் குறைத்து விடக்கூடாது. காதலன், காதலிதான் உலகம் என்றும் வாழக்கூடாது. அப்படி இருந்தால்தான் காதலில் தோற்றால் கூட அதற்காக வருத்தப்படமாட்டோம். அதில் இருந்து மீண்டு வருவோம். நான் இப்போது யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு திருமணம் நடப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது”.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries