ஜெய்-அஞ்சலி பட ஷூட்டிங்கை தொடங்கி வைத்த சூப்பர் சுப்பராயன்

201607061854061230_Jai-Anjali-started-shooting-Super-Subbarayan_SECVPFஜெய்-அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு ஜெய்-அஞ்சலி கெமிஸ்ட்ரியும் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஜெய்-அஞ்சலி இடையே காதல் என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் தோன்றி மறைந்ததும் உண்டு.

இந்நிலையில் இந்த ராசியான ஜோடி ஐந்து வருடங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இந்த படம் காதல் கலந்த திகில் படமாக உருவாக இருக்கிறது.

70 எம் எம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் பிளான் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

‘தயாரிப்பாளர் அருண் பாலாஜியின் தந்தை ‘மெட்ராஸ்’ படப்புகழ் நந்தகுமார் கேமராவை ஆன் செய்ய, தயாரிப்பாளர் திலீப் சுப்பராயனின் தந்தையும், தமிழ் சினிமா துறையின் மூத்த ஸ்டண்ட் மாஸ்டருமான ‘சூப்பர் சுப்பராயன்’ இந்த படத்தின் முதல் காட்சியை கிளாப் போர்டு அடித்து ஆரம்பித்து வைத்தார்.

முழுக்க முழுக்க கொடைக்கானலில் படமாக்கப்பட உள்ள இந்த படத்தில் ஜெய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். 1989 ஆம் ஆண்டை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படும் இந்த படமானது, ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் அடுத்த மைல் கல்லாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries