முடிவுக்கு வந்தது சசிக்குமாரின் கிடாரி

201607061751019334_Sasikumar-kidari-movie-shooting-wrapped_SECVPF‘தாரை தப்பட்டை’, ‘வெற்றிவேல்’ படத்திற்கு பிறகு சசிக்குமார் நடித்து வரும் படம் ‘கிடாரி’. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சசிக்குமார் தனது சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்துள்ளதால் விரைவில் படத்தின் பின்னணி வேலைகள் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ‘வெற்றிவேல்’ படத்தின் நாயகி நிகிலா விமல் மீண்டும் சசிக்குமாருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நெப்போலியன் இப்படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். ‘ராஜதந்திரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த தர்புகா சிவா, இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகிறார்.

பிரசாந்த் முருகேசன் இயக்கியுள்ள இந்த படத்தை சசிக்குமார் தயாரித்துள்ளார். விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online