ரஜினி ரசிகராக நடிக்கும் விக்ரம் பிரபு

201607061435577137_Vikram-prabhu-rajini-fan-in-neruppuda-movie_SECVPFவிக்ரம் பிரபு-நிக்கி கல்ராணி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ‘கபாலி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நெருப்புடா’ என்ற பாடல் தலைப்பையே இந்த படத்திற்கும் வைத்துள்ளனர்.

இப்படத்தில் நடிப்பதோடு, தனது சொந்த நிறுவனம் ‘பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் விக்ரம் பிரபு. இந்த நிறுவனத்தின் தொடக்கவிழாவும் இன்று நடந்தேறியது. இந்த படத்தில் விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராக நடிப்பதால் ‘நெருப்புடா’ தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி இந்த தலைப்பை தேர்வு செய்ததாக கூறினர்.

தற்போது, இந்த படத்தில் விக்ரம் பிரபு, ரஜினி ரசிகராகவும் நடிக்கப்போவதாக கூறுகின்றனர். இந்த படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். அசோக் குமார் இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

விக்ரம் பிரபுவுடன் இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் மற்றும் சினி இன்னோவேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online