சுந்தர்.சி-யை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்

201607072021479423_AR-Rahman-wished-to-Sundar-c_SECVPFபல வெற்றி படங்களை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் 100வது படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இப்படம் ராஜமவுலியின் ‘பாகுபலி’ மற்றும் சங்கரின் ‘2.0’ படங்களுக்கு இணையான அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகவுள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது.

ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும் இந்த படத்தை இயக்கும் சுந்தர்.சி உள்பட படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘சங்கமித்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் விஜய் தமிழிலும் மகேஷ்பாபு தெலுங்கு பதிப்பிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online