முடிஞ்சா இவன புடி பாடல்களை வெளியிடும் கமல்

201607081331203009_Kamal-release-mudinja-ivana-pudi-movie-songs_SECVPFகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. இப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். முகேஷ் திவாரி, சரத் லோகித் சிவா ஆகியோர் வில்லனாக நடித்துள்ளனர். நாசர், விச்சு, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டி.இமான் இசையில் அமைந்துள்ள இப்பாடல்களை வருகிற ஜுலை 20-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த பாடல்களை கமலஹாசன் வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இப்படத்தை ராக்லைன் வெங்கேடஷ் வழங்க எம்.பி.பாபு தயாரித்துள்ளார்.

பாடல்களை தொடர்ந்து விரைவில் படத்தை வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளார். கமல் தற்போது ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online