உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மாதவன்

201607081157245627_Madhavan-weight-loss-in-new-movie_SECVPFநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த மாதவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், நல்ல கதையம்சமுள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் மலையாளத்தில் வெளிவந்த ‘சார்லி’ படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், ‘களவாணி’, ‘வாகை சூடவா’ படங்களை இயக்கிய சற்குணம் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்திற்காக மாதவன் தற்போது தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு வருகிறாராம். இப்படத்தில் மாதவனுக்கு சீன தற்காப்பு கலை பயின்றவராக நடிக்கிறாராம். இதற்காக அமெரிக்கா சென்று அங்கு சீன தற்காப்பு கலையை பயின்று வருகிறாராம். அதோடு, ஜிம்மில் உடற்பயிற்சியும் மேற்கொண்டு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.

இப்படம் முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படம் முடிந்தபிறகு ‘சார்லி’ ரீமேக்கில் மாதவன் நடிப்பார் என தெரிகிறது. ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை மாஸ்டராக நடித்த மாதவன், அப்படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online