அப்பா படம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது: சமுத்திரக்கனி

201607091641399264_Appa-film-received-good-response-Samuthirakani_SECVPFசினிமா டைரக்டரும், நடிகருமான சமுத்திரக்கனி ஈரோடு வந்தார். அவர் அப்பா படம் திரையிடப்பட்டு உள்ள தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தார். இதன்பிறகு அவர் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு முழுவதும் அப்பா படம் திரையிடப்பட்டு உள்ள தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்து வருகிறேன்.

ரசிகர்களுடன் உட்கார்ந்து படம் பார்க்கும் போதுதான் அவர்களின் உணர்வுகளை–ரசிப்பதை உணர முடிகிறது.

அப்பா படம் என் மனதில் இருந்த, பாதித்த சம்பவங்களை வைத்து கதையை உருவாக்கி இருக்கிறேன். மக்கள் ரசனைக்கு ஏற்ப படங்களை படைப்பது தான் நல்ல கலைஞனாக கருதப்படுகிறார்..

நல்ல படைப்புகள் வராத போது ஏதோ படத்தை பார்த்து கைதட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நல்ல படைப்புகள் எப்போதுமே பொது மக்களை போய் சேரும். என்பது அப்பா படம் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

அப்பா படத்தை எடுத்த போது இது வெற்றி பெறுமா என்று பலர் நினைத்தார்கள். ஆனால் முழு நம்பிக்கை வைத்து நான் இந்த படத்தை எடுத்தேன். இந்த படம் பொது மக்களின் வரவேற்பை பெற்று உள்ளது.

இப்போது இந்த படம் சக்சஸ் ஆகி இருப்பது சந்தோ‌ஷமாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த அப்பா படம் எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு நினைத்தால் திருட்டு வி.சி.டிக்களை கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online