முந்தைய சாதனைகளை முறியடித்த சுல்தான்: மூன்றே நாட்களில் ரூ.106 கோடி வசூல்

201607091400206276_Sultan-breaks-all-records-on-box-office-earns-Rs-106-crore_SECVPFசல்மான் கானின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சுல்தான்’ திரைப்படம் ரிலீசான மூன்றே நாட்களில் 106 கோடி ரூபாயை குவித்து வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் – அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் மட்டும் சுமார் சுமார் ஐயாயிரம் திரையரங்குகளில் வெளியான ‘சுல்தான்’ முதல்நாள் டிக்கெட் விற்பனையின் மூலம் மட்டும் 36.54 கோடி ரூபாயை வசூலித்தது.

கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்துள்ள இந்தப்படம் ஷாருக் கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ மற்றும் சல்மான் கானின் ‘பிரேம் ரடன் தன் பாயோ’ ஆகிய படங்களின் முந்தைய வசூல் சாதனையை தற்போது முறியடித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online