அஞ்சலியுடன் பலூன் விட ஆரம்பித்த ஜெய்

201607101901392414_Jai-Anjali-movie-tittle-announced_SECVPFஜெய்-அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு ஜெய்-அஞ்சலி கெமிஸ்ட்ரியும் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஜெய்-அஞ்சலி இடையே காதல் என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் தோன்றி மறைந்ததும் உண்டு.

இந்நிலையில் இந்த ராசியான ஜோடி ஐந்து வருடங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இந்த படம் காதல் கலந்த திகில் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை அறிவித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ‘பலூன்’ என்று தலைப்பு வைத்து அதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கின்றனர். இந்த படம் ஜெய்யின் 20வது படமாகும். மேலும் இந்த படத்தில் ஜெய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online