தல 57-இல் இணைந்த பிரபல காமெடி நடிகர்

201607101235242828_Famouse-comedy-actor-joint-Thala-57_SECVPFஅஜித் நடிக்கும் ‘தல57’ படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரபல காமெடி நடிகர் கருணாகரன் இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கருணாகரன் தற்போது தனுஷுடன் ‘தொடரி’, விக்ரமுடன் ‘இருமுகன்’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தல57’ படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். வெற்றி ஒளிப்பதிவை கவனிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online