ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப்போன தல 57

201607111404511787_Thala-57-shooting-postponed-august_SECVPFஅஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தல 57’ படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் எளிமையாக நடந்தது. இப்படத்தை அஜித்தை வைத்து ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கிறது. இப்படத்தின் பூஜையைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது படப்பிடிப்பு தேதியை படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, ஆகஸ்ட் 10-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்களாம். தற்போது இப்படத்தின் கதாநாயகி தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக காஜல் அகர்வாலிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. காமெடி நடிகர் கருணாகரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online