கபாலி ரிலீஸ் குறித்து மனம் திறந்த கலைப்புலி எஸ்.தாணு

201607111330104931_Kalaipuli-Thanu-opens-up-kabali-release-date_SECVPFதமிழ் சினிமா மட்டுமில்லாது உலக சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘கபாலி’. ரஜினியின் லுக் மற்றும் அவரது ஸ்டைல் இந்த படத்தை பார்க்க ஒவ்வொருக்கும் பெரிய ஆவலை தூண்டியுள்ளது.

ஆனால், ‘கபாலி’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையிலும், படம் இன்னும் சென்சாருக்கு அனுப்பப்படவில்லை. மேலும், ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் சரிவர தெரியாததால் மிகவும் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, உற்சாகம் தரும் வகையில் ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறும்போது, “இன்னும் ஓரிரு நாட்களில் ‘கபாலி’ படம் சென்சாருக்கு அனுப்பப்படுகிறது. சென்சார் முடிந்தபிறகே ரிலீஸ் தேதியை அறிவிப்பேன். ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ‘கபாலி’ படம் இந்த ஜுலை மாதமே வெளியாகும் என்று கூறியுள்ளார்.

அதன்படி, இன்னும் ஓரிரு நாட்களில் ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும் என தெரிகிறது. ‘கபாலி’ ஜுலை 22-ந் தேதி வெளியாகப் போவதாக இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அந்த செய்திகள் உண்மையாகிவிடும் என்று தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online