நான் துரதிருஷ்டவசமாக சினிமாவுக்கு வந்துவிட்டேன்: சன்னிலியோன் பேட்டி

201607121350294550_I-unfortunately-had-come-to-the-Cinema-Sunny-Leone-interview_SECVPFஇந்தி பட உலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். 2011 முதல் படங்களில் நடித்து வருகிறார். இவரது முதல் படம் ‘ஜிஸிம்–2’. ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்எஸ்–2’, ‘ஏக்பஹேலி’, ‘லீலா’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

என்றாலும் இவரால் இந்தி பட உலகில் முக்கிய இடத்தை பிடிக்கமுடியவில்லை. சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ‘ரயீஸ்’ படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார்.

சினிமாவில் நீண்டகாலம் தன்னால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கவலை இவருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “ஒரே இடத்தில் இருக்கக்கூடாது.

மாறிக்கொண்டே இருக்க வேண்டும். நானும் அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவள்தான். துரதிருஷ்டவசமாக சினிமாவுக்கு வந்து விட்டேன். தற்போது இதை நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன்.

என்றாலும், நான் சினிமாவிலேயே இருப்பேன் என்று கருதவில்லை. ஒரு துறையில், அல்லது தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்றால் நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் அதுதான் வழிமுறை. அப்போதுதான் நாம் முன்னேற முடியும்” என்று கூறியுள்ளார்.

சன்னி லியோனின் இந்த கருத்து இந்தி பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online