சத்யராஜுடன் கூட்டணி அமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

201607121339290281_GV-Prakash-joint-with-sathyaraj_SECVPFஇசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்–2’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 2 வருடங்களில் இவரது நடிப்பில் 4 படங்கள் வெளியாகி இருக்கின்றன. இப்போது ‘புரூஸ்லி’, கடவுள் இருக்கான் குமாரு’ படங்களில் நடித்து வருகிறார். வேறு 2 படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் 4–வது படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இது இவரது 8–வது படமாகும். சண்முகம் முத்துசாமி இயக்குனராக அறிமுகம் ஆகும் இந்த படத்தில், ஜி.வி.பிரகாசுடன் சத்யராஜ் இணைகிறார். இவர்களுடன் தம்பிராமையா,ரோபோசங்கர், ஆர்.ஜே.விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். பிகே வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். நாயகி தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தின் தொடக்க விழா பூஜை நடந்தது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் எம்.எஸ். சரவணன் மற்றும் ஷாம், பிரசன்னா, ராம்கி, நிரோஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online