கபாலி ரஞ்சித்தின் அடுத்த கனவு

201607131539390039_Kabali-Ranjith-next-dream_SECVPFதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஒவ்வொரு இயக்குனருக்கும் தன் வாழ்நாளில் ஒரு படமாவது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிவிட வேண்டும் என்ற கனவோடுதான் சினிமா உலகிற்குள் நுழைகிறார்கள். அப்படி நுழைபவர்களில் ஒன்றிரண்டு பேருக்குத்தான் அந்த கனவு நிறைவேறுகிறது. பலபேருக்கு அந்த கனவு வெறும் கனவாகவே போய்விடுகிறது.

அந்த வரிசையில் இயக்குனர் பா.ரஞ்சித் மிகவும் கொடுத்து வைத்தவர்தான். சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கவேண்டும் என்ற கனவோடு சினிமாவில் நுழைந்த ரஞ்சித்துக்கு, தனது மூன்றாவது படத்தையே சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த காலக்கட்டத்தில் யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தன்னுடைய கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கும் ரஞ்சித்துக்கு தற்போது இன்னொரு கனவும் இருக்கிறதாம். அது தயாரிப்பாளராக வேண்டும் என்பதுதான் அந்த கனவும்.

அந்த கனவும் கூடிய விரைவில் நிறைவேறப் போவதாக அவரே தெரிவித்துள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் குறித்த தகவலை விரைவில் அறிவிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online