மொட்ட சிவா கெட்ட சிவா படப்பிடிப்பு முடிந்தது

201607131326244751_Motta-siva-ketta-siva-shooting-wrapped_SECVPFராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘காஞ்சனா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடாந்து ராகவா லாரன்ஸ் ஒரே நேரத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

இதில், முதலில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவிருக்கின்றன.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நிக்கி சல்ராணி, சத்யராஜ், வம்சி கிருஷ்ணா, கோவை சரளா, மனோபாலா, சதீஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் ரமணி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே, ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘சிங்கம் புலி’ படத்தை இயக்கியவர். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online