அமெரிக்காவில் கபாலி செய்த 2 மணி நேர சாதனை

201607141141286038_Kabali-record-break-in-USA_SECVPFரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் மலாய் மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில். ‘கபாலி’ படம் அமெரிக்காவிலும் வெளியாகிறது. இதுவரை எந்த தமிழ் படங்களும் இல்லாத அளவுக்கு அங்கு 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் படத்திற்கு அமெரிக்காவில் இவ்வளவு பெரிய வரவேற்பு இருப்பது மிகப்பெரிய சாதனையாக கூறப்படுகிறது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், நாசர், கிஷோர், ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online