கபாலியில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த ரஜினி

201607151225488865_Rajini-not-dupe-in-stunt-sequence-at-kabali_SECVPFரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாய் வெளியாகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்தின் விளம்பரம் இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாய் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினி சில ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ‘கபாலி’ டீசரில் கார் ஒன்று சறுக்கிக்கொண்டு சுற்றி வருவதுபோல் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில்தான் ரஜினி டூப் போடாமல் கார் ஓட்டி படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தினாராம்.

இந்த காட்சியில் முதலில் ரஜினிக்கு பதிலாக டூப் போட்டு நடிக்க வைக்கலாம் என ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு மற்றும் அறிவு இருவரும் முடிவு செய்தனர். ஆனால், ரஜினியே முன்வந்து இந்த காட்சியில் நானே நடிக்கிறேன் என்று சொன்னாராம். ஒருவித தயக்கத்துடன் மாஸ்டர்களும் ஓகே சொல்ல, அந்த ஸ்டண்ட் காட்சியில் ரஜினியே நடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தாராம்.

அந்த காட்சி திரையில் பார்க்கும்போது அனைவருக்கும் வியப்பாக இருக்கும் என்று ஸ்டண்ட் மாஸ்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ‘கபாலி’ படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, நாசர், கிஷோர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries