சென்னையில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த கபாலி டிக்கெட்

201607151330302621_Kabali-pre-booking-sold-out-in-chennai_SECVPFரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் உலகமெங்கும் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிக்கெட்டுகள் வெளிநாடுகளில் விநியோகிக்கப்பட்டு, பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் எப்போது ‘கபாலி’ படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று சென்னையின் பிரபல எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் ‘கபாலி’ படத்தின் டிக்கெட் முன்பதிவை இன்று தொடங்கியது. தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் முதல்நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அடுத்தடுத்த நாட்களுக்கும் தொடர்ந்து டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன.

FD68A65D-1A01-41C2-A285-05639C824843_L_styvpf‘கபாலி’ படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகிறது. இதுவரை எந்த படமும் இல்லாத அளவுக்கு ‘கபாலி’ படம் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries