அறுவை சிகிச்சைக்குப் பின் கமல் நலமாக உள்ளார்: அண்ணன் சந்திரஹாசன் பேட்டி

201607151254342027_Brother-Chandrahasan-says-kamal-is-fine-after-operation_SECVPFநடிகர் கமல் தனது அலுவலக படிக்கட்டிலிருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்ததால் அவரது காலில் காயம் ஏற்பட்டது. அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை முட நீக்கியல் டாக்டர்கள் பரிசோதித்தனர். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. அவருக்கு எலும்பு முறிவை சரி செய்யும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவரை 3 நாட்கள் ஓய்வு எடுக்கும் படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே அவர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. அவரை நடிகை கவுதமி அருகில் இருந்து கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆபரே‌ஷன் வெற்றிகரமாக நடந்ததாகவும் கமல் நலமாக இருப்பதாகவும் அவரது அண்ணன் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

படியிலிருந்து தவறி விழுந்ததில் கமலுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. ஒரு வார காலம் சிகிச்சைக்கு பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார். 4 முதல் 6 வார காலத்திற்கு பிறகு கமல் இயல்பாக நடக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

காலிற்கு அதிக பாரம் தரக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் கைப்பிடியை பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் அவர் நலமாகவும் உற்சாகமாகவும் உள்ளார். ரசிகர்கள் பயப்பட தேவையில்லை.

முதுகு தண்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏற்கனவே சபாஷ் நாயுடு படப்பிடிப்பை ஒரு மாத காலத்திற்கு பிறகு நடத்தலாம் என திட்டமிட்டிருந்தோம். இந்நிலையில், மேலும் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி போகும். ஆனால் படப்பிடிப்பில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அவர் இல்லாமல் படப்பிடிப்பு நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries