இணையதளத்தில் ரசிகர்கள் விரும்பும் நடிகர்களில் சல்மான் கானுக்கு முதலிடம்

201607161420489840_Salmankhan-first-for-fans-wishes-hero-list_SECVPFஇணையதளத்தில் நடிகர்– நடிகைகளை பற்றிய செய்திகளை ரசிகர்கள் அதிகம் விரும்பி படிக்கிறார்கள். இதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் முதலிடத்தில் இந்தி நடிகர் சல்மான்கான் உள்ளார். அவரை பற்றிய செய்திகள், புகைப்படங்களை ரசிகர்கள் அதிக முறை தேடி உள்ளனர்.

2–வது இடத்தில் ஷாருக்கான், 3–வது இடத்தில் அக்‌ஷய்குமார், 4–வது இடத்தில் அமிதாப்பச்சன், உள்ளனர். ரஜினிகாந்த் 5–வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

நடிகைகளில் கவர்ச்சி புயல் சன்னி லியோன் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். 2–வது இடத்தில் கத்ரீனா கைப், 3–வது இடத்தில் கரீனாகபூர், 4–வது இடத்தில் காஜல்அகர்வால், 5–வது இடத்தில் தீபிகாபடுகோனே இருக்கிறார்கள்.

கிளாசிக் கதாநாயகர்களில் அமிதாப்பச்சன் முதலிடத்திலும், 2–வது இடத்தில் கமல்ஹாசன், 3–வது இடத்தில் ராஜேஷ்கன்னா, 4–வது இடத்தில் ராஜ்குமார், 5–வது இடத்தில் மிதுன் சக்கரவர்த்தி உள்ளனர்.

கிளாசிக் நடிகைகளில் முதலிடத்தில் இந்தி நடிகை ரேகா உள்ளார். 2–வது இடத்தில் ஸ்ரீதேவி, 3–வது இடத்தில் மதுபாலா, 4–வது இடத்தில் ஹேமமாலினி, 5–வது இடத்தில் ஜீனத்அமன் இருக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online