மீண்டும் தனுஷுடன் இணைந்த விஜய் சேதுபதி

201607160900073222_Vijaysethupathi-important-cameo-role-in-Dhanush-vadachennai_SECVPFதனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மீண்டும் தனுஷுடன் இணைந்துள்ளார். இந்த முறை தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வடசென்னை’ படத்தில்தான் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றாலும், சிறப்புத் தோற்றத்திலேயே நடிக்கிறாராம். ஏற்கெனவே, விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதாக ஒரு செய்தி உலாவி வந்தது. அந்த செய்தியை தற்போது தனுஷ் உறுதி செய்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஏற்கெனவே ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது விஜய் சேதுபதியை உறுதி செய்துள்ளார்கள். இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக உருவாகவிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி, சென்னையில் போடப்பட்டுள்ள மிகப்பெரிய ஜெயில் அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரகனி, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது, அவர் வேறு காரணங்களுக்காக இந்த படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதிலாக வேறு நாயகி தேடும் படலம் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தனுஷும், வெற்றிமாறனும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இவர் இருவரும் இணைந்து தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online