திரையரங்குகளை தொடர்ந்து பைவ் ஸ்டார் ஹோட்டல்களிலும் வெளியாகும் கபாலி

201607181448582315_Kabali-premier-show-screening-in-five-star-hotels_SECVPFரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. திரையரங்குகளில் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்துவரும் வேளையில், தற்போது திரையரங்குகளை தொடர்ந்து பைவ் ஸ்டார் ஹோட்டல்களிலும் ‘கபாலி’ படத்தை வெளியிடவுள்ளனர்.

ஆனால், இது சென்னையில் அல்ல, பெங்களூரில். பெங்களூரில் புகழ்பெற்ற JW Marriott, Lalit Ashok, Royal Orchid, Crown Plaza ஆகிய பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ‘கபாலி’ படம் அதிநவீன முறையில் திரையிடப்படுகிறது.

இங்கு படம் பார்க்க வரும் ஒருவருக்கு ரூ.1300 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டிக்கெட் விலை மட்டுமே. மொத்தம் 3 நாட்கள் ஹோட்டல்களில் ‘கபாலி’ படம் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருநாளில் நான்கு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் 300 பேர் வரை அமர்ந்து பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஹோட்டல்களில் ‘கபாலி’ படத்தை திரையிடுவதற்காக பெங்களூரு நகர்புற துணை கமிஷனரின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

அவர், ஹோட்டல்களில் ‘கபாலி’ படத்தை திரையிட உத்தரவு பிறப்பித்தார் என்றால், இந்திய சினிமாவிலேயே பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை ‘கபாலி’ பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online