கபாலி டிக்கெட் முன்பதிவு செய்ய சென்னை திரையரங்குகளில் கூடிய ரசிகர்கள் கூட்டம்

201607181239559488_Kabali-ticket-reservation-fans-crowd-in-theaters_SECVPF (1)ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி உலகமெங்கிலும் பிரம்மாண்டமாக வெளிவருகிறது. இப்படத்தை முதல் நாளே முதல் காட்சி பார்த்துவிட துடிக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இப்படத்தை முதல் நாளே பார்த்துவிட மாட்டோமா? என்று ஏங்கும் ரசிகர்களும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உட்லண்ட்ஸ் திரையரங்கில் டிக்கெட் முன்பதிவுக்காக கூடியிருந்த கூட்டம்.

D3686A07-4F6B-4DA0-9A11-AB49EDB6ADB1_L_styvpfஇந்நிலையில், இன்றுமுதல் ‘கபாலி’ படத்தின் டிக்கெட் விற்பனை தமிழகமெங்கும் தொடங்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவு தொடங்கியது என்றவுடன், சென்னையில் உள்ள திரையரங்குகளில் அனைத்திலும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு திரண்ட கூட்டத்தை பார்த்ததும் திரையரங்கு உரிமையாளர்களும் திண்டாடி போயினர்.

பல திரையரங்குகளில், இணையதளத்தில் மட்டும்தான் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அதுகூட தெரியாமல் நிறையபேர் திரையரங்கில் டிக்கெட் வாங்க கூடியிருந்தனர். இணையதளத்தில் மட்டும்தான் முன்பதிவு செய்யமுடியும் என்று தெரிந்தவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online