விஜய்சேதுபதியின் தர்மதுரை ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது

201607180847028591_Dharmadurai-audio-release-date-revealed_SECVPFவிஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தர்மதுரை’. இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே நடந்து முடிந்துவிட்டது. இதையடுத்து, இறுதிக்கட்ட பணிகளில் களமிறங்கியிருந்த படக்குழு, இப்படத்தின் ஆடியோ எப்போது வெளியிடுவது? படத்தை எப்போது வெளியிடுவது? என்பது குறித்து வாயே திறக்கவில்லை.

மேலும், ‘தர்மதுரை’ படத்தை பற்றிய செய்திகளும் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், வருகிற ஜுலை 27-ந் தேதி ‘தர்மதுரை’ படத்தின் ஆடியோவை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆடியோவை இப்போது வெளியிட்டுவிட்டு, ஆகஸ்ட் 12-ந் தேதி படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். தமன்னா, சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘தர்மதுரை’ படத்தை ‘ஸ்டுடியோ 9’ நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries