சல்மான் கானின் சுல்தான் 12 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்தது

201607191206456227_Sultan-grosses-Rs-500-cr-worldwide-in-12-days_SECVPFபாலிவுட் நடிகர் சல்மான் கான் – அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் மட்டும் சுமார் சுமார் ஐயாயிரம் திரையரங்குகளில் வெளியான ‘சுல்தான்’ முதல்நாள் டிக்கெட் விற்பனையின் மூலம் மட்டும் 36.54 கோடி ரூபாயை வசூலித்தது.

ரிலீசான மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்த இந்தப்படம் ஷாருக் கானின் ‘ஹேப்பி நியூ இயர்’, ‘ஃபேன்’ மற்றும் சல்மான் கானின் ‘பிரேம் ரடன் தன் பாயோ’ ஆகிய படங்களின் முந்தைய வசூல் சாதனையை முறியடித்தது.

நான்கு நாட்களில் 142 கோடியே 62 லட்சம் ரூபாயை சம்பாதித்ததன்மூலம், ‘ஹவுஸ் புல்’ (ரூ.107 கோடி), ‘ஏர்லிப்ட்’ (ரூ.127 கோடி) ஆகிய இந்த ஆண்டின் பாலிவுட் வசூல் சாதனைகளை ‘சுல்தான்’ முறியடித்தது.

இந்நிலையில், ரிலீசான 12 நாட்களில் வெளிநாடுகளில் சுமார் 130 கோடி ரூபாயும், உள்நாட்டு வசூலாக 370 கோடி ரூபாயும் குவித்ததன் மூலமாக பாலிவுட் படங்களில் அதிகமான வசூல் சாதனை நிகழ்த்திய நான்காவது திரைப்படமாக ‘சுல்தான்’ பார்க்கப்படுகிறது.

விரைவில், உலகளாவிய பாலிவுட் பட வசூல் சாதனையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் “தூம் 3” (ரூ.542 கோடி) என்ற இலக்கையும் கடந்து பல்வேறு புதிய சாதனைகளை ’சுல்தான்’ உருவாக்கும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries