கபாலி படத்துக்கு வரிவிலக்கு

201607201653095911_Tax-exemption-granted-for-Kabali_SECVPFரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தில் எந்தவொரு காட்சிக்கும் கட் கொடுக்காமல் தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் கொடுத்தது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கூடுதல் மகிழ்ச்சியாக தற்போது தமிழக அரசு ‘கபாலி’ படத்திற்கு வரிவிலக்கு வழங்கியுள்ளது. இதனை ‘கபாலி’ படத்தின் மக்கள் தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

‘கபாலி’ படம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 12 ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் இதுவரை எந்த படங்களுக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். ராதிகா ஆப்தே, நாசர், கிஷோர், கலையரசன், ஜான் விஜய், ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்திற்கான விளம்பரங்கள் மிகப்பெரிய செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries