ராதிகா ஆப்தேவுக்காக காத்திருந்த ரஜினிகாந்த்

201607200922386003_Rajinikanth-waiting-for-Radhika-Apte_SECVPFபிரகாஷ்ராஜுடன் ‘தோனி’, கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ மற்றும் வெற்றிவேல் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராதிகா ஆப்தே தற்போது ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். ‘கபாலி’யில் நடித்த அனுபவங்கள் பற்றி ராதிகா ஆப்தே கூறியதாவது:-

“நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. அவருடன் ஜோடி சேரும் வாய்ப்பு ‘கபாலி’ படத்தின் மூலம் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. வாழ்க்கையில் ஒரு தடவைதான் இதுபோன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். ரஜினியுடன் நடிக்க நிறைய கதாநாயகிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் டைரக்டர் ரஞ்சித் ஏஜெண்டுகள், இடைத்தரகர்கள் உதவி இல்லாமல் நேரடியாகவே போனில் என்னிடம் பேசி சென்னைக்கு அழைத்து கதை சொன்னார்.

கபாலியில் குமுதவல்லி என்ற கதாபாத்திரத்தில் தாதாவின் மனைவியாக நடித்து இருக்கிறேன். தன்ஷிகா எனது மகளாக வருகிறார். நான் இளமையான வேடத்திலும் வயதான பெண்ணாகவும் இரண்டு தோற்றங்களில் வருகிறேன். ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த நாட்கள் இனிமையாக இருந்தது. படப்பிடிப்புக்காக முதல் நாள் நடந்த ‘போட்டோஷூட்’டுக்கு நான் சென்றபோது கேரவனுக்கு வெளியே எனக்காக காத்திருந்து வரவேற்றார். எந்த நடிகர் இப்படி செய்வார்?.

அந்த சம்பவம் எனக்கு நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. முதலில் அவரிடம் மராத்தி மொழியில் பேசினேன். பிறகு இந்தி, ஆங்கிலத்தில் உரையாடினோம். ரஜினிகாந்த் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் தொழில் மீது அவர் காட்டிய அக்கறையை பார்த்து வியந்தேன். கபாலி படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.’

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online