தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறையும் விட்டுவைக்காத கபாலி காய்ச்சல்: முதல் நாள் ஷோவுக்கு டிக்கெட் கேட்டு கடிதம்

201607211954537892_Senior-PA-of-Minister-for-Info-amp-Publicity-writes-to_SECVPFதமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் தலைமை தனி உதவியாளர் ஒருவர் கபாலி திரைப்படத்தின் 10 டிக்கெட்டுகள் கேட்டு அபிராமி திரை அரங்கிற்கு அனுப்பிய கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது.

கபாலி காய்ச்சல் எவரையும் விட்டுவைக்கவில்லை. தலைமைச்செயலகம் வரை தொற்றி இருப்பதற்கான சான்று ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையை சேர்ந்த தலைமை தனி உதவியாளர் வி.பிரேம் குமார் கடந்த 15-ம் தேதி அவர் துறையின் லெட்டர் பேடில், சென்னையில் உள்ள அபிராமி தியேட்டருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், இந்த கடிதம் கொண்டுவரும் ரிஸ்வான் என்பவரிடம், கபாலி திரைப்படத்தின் முதல் நாள் அதாவது 22.07.16 நாளுக்கான, முதல் ஷோவிற்கான 10 டிக்கெட்டுகள் கொடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கீழே பச்சை நிறத்தில் தன் கையெழுத்து இட்டு, சீலிட்டு அனுப்பியுள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online