கபாலி படம் வெற்றி பெற ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

201607211814295103_kabali-film-to-win-the-fans-worshiped-in-temples_SECVPFரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்,தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் இந்த படம் திரைக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் கபாலி திரையிடப்படுகிறது. கபாலி ரிலீசை ரஜினிகாந்த் ரசிகர்கள் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

தியேட்டர்களில் கட்அவுட், பேனர்கள் அமைத்துள்ளனர். கொடிதோரணங்களும் கட்டி உள்ளனர்.

கபாலி படம் வெற்றி பெற ரஜினி ரசிகர்மன்ற பிரமுகர் ஆர். ரவிச்சந்திரன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

கே.கே.நகர் ரஜினி ரசிகர்மன்றம் சார்பில் பி.சாதிக் பாட்ஷா தலைமையிலும் ஆர். லட்சுமணன் முன்னிலையிலும் எம்.ஜி.ஆர் நகரில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை எம்.கே.எஸ் முருகன் தொடங்கி வைத்தார். உதயம்கனி, ரஜினிமாரி, படையப்பா செந்தில்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தியாகராய நகர் பகுதி ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் வடபழனி கோவிலில் கபாலி படம் வெற்றி பெற சிறப்பு பூஜை நடந்தது. இதில் சென்னை மாவட்ட நிர்வாகிகள் என். ராமதாஸ்–ஆர்.சூரியா, கே.ரவி மற்றும் ஆர்.ரவிச்சந்திரன் ராகவேந்திரா தயாளன்,லிபர்டி ஏ.வேலு, சி.ஆர்.பி கே.ஜெகன், பி.ஏ. அந்தோணி என்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries