புதுச்சேரியில் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டிய 107 குடும்பங்களுக்கு இலவச கபாலி டிக்கெட்

201607211604212755_107-families-free-Kabali-tickets-for-work-in-clean-india_SECVPFபுதுவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கவர்னர் கிரண்பேடி தூய்மை பணி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். நகரை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் சிறப்பாக செயல்படும் துப்புரவு பணியாளர்களுக்கும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டி உள்ளவர்களுக்கும் ரஜினியின் ‘கபாலி’ பட டிக்கெட் வழங்கப்படும் என்று கிரண்பேடி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

அதன்படி தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டியுள்ள 107 குடும்பங்களுக்கு ‘கபாலி’ பட டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை இன்று மதியம் கலெக்டர் சத்யேந்திரசிங் அந்த குடும்பத்தினரிடம் வழங்கினார். இதற்காக பல்வேறு தியேட்டர்களிலும் ‘கபாலி’ பட டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிக்கெட்டுக்கான பணத்தை கவர்னர் மாளிகை ஊழியர்களிடமும் மற்றும் பல்வேறு அதிகாரிகளிடமும் திரட்டி உள்ளனர். கவர்னர் கிரண்பேடி தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் வழங்கி இருக்கிறார். அதேபோல் கவர்னரின் செயலாளர் தேவநீதிதாசும் ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார். கவர்னர் மாளிகை ஊழியர்கள் கணிசமான தொகையை வழங்கி இருக்கிறார்கள்.

கவர்னர் கிரண்பேடி ரஜினி மீது மிகவும் அன்பு கொண்டவர். அவர் தனது பதவி ஏற்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தார். புதுவை தூய்மை பணி தூதுவராக ரஜினிகாந்த் வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online