கரூர் தியேட்டர் அருகே கபாலி ரஜினி தோற்றத்தில் தயாரான 60 கிலோ கேக்

201607221604256161_60-kg-cake-prepared-in-appearance-Rajini-near-karur-theatre_SECVPFநடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் நேற்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.

தமிழகத்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் கபாலி படம் திரையிடப்படுகிறது. முன் எப்போதும் கிடைத்திராத வரவேற்பு கபாலி ரஜினிக்கு கிடைத்துள்ளது. டிரைலர் வெளியீடு முதல் அனைத்திலும் கபாலி சாதனை படைத்தது.

அதன் உச்சமாக விமானத்தில் கபாலி பட போஸ்டர் ஒட்டப்பட்டது. இது உலகில் எந்த நடிகருக்கும் கிடைத்திடாத பெருமையாக கூறப்பட்டது. எங்கும் கபாலி ஜூரம், கபாலி மயம் என்ற நிலையை காணமுடிகிறது. கரூர் பெரு நகரில் முக்கிய சந்திப்புகளில் கபாலி பிளக்ஸ் பேனர்கள் அரசியல் கட்சிகளுக்கு இணையாக அலங்கரிக்கிறது.

அதில் ‘உள்ளூர் நடிகனாய் அன்று, உலக தலைவனாய் இன்று’ என ரசிகர்கள் வாசகங்களை அச்சடித்துள்ளனர்.

இந்த நிலையில் கரூரில் கபாலி ரிலீஸ் ஆகியுள்ள தியேட்டர் முன்பு உள்ள பேக்கரியில் கபாலி ரஜினி தோற்றத்தில் 60 கிலோ எடையில் கேக் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கின்றனர். 10 தினங்களாக மெருகூட்டி இந்த கபாலி ரஜினி கேக் தயாரிக்கப்பட்டதாக அந்த பேக்கரி உரிமையாளர் டெல்லி ஸ்வீட்ஸ் லட்சுமணன் தெரிவித்தார்.

4¼ அடி உயரத்தில் கண்ணாடி பேழையில் ரஜினி ஸ்டைலாக நிற்பது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries