சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் உலகம் முழுவதும் இன்று ரீலிசானது. திண்டுக்கல்லில் ராஜேந்திரா, உமா, கணேஷ் ஆகிய 3 தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது. மிகுந்த ஆவலுடன் இருந்த ரஜினி ரசிகர்கள் நேற்று நள்ளிரவு முதல் தியேட்டர் முன்பு குவியத் தொடங்கினர்.
இன்று காலை 6.45 மணிக்கு படம் திரையிடப்பட்டது. இந்த முதல் காட்சி ரசிகர்களுக்காக ஒதுக்கப்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் ஆடி பாடி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நடிகர் சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அறிவானவன் அடங்காதவன்’ படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறது. கபாலி படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்ப்பதற்காக அன்றைய தினம் படக்குழுவினருக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி சிம்பு இன்று காலை படக்குழுவினருடன் திண்டுக்கல் ராஜேந்திரா தியேட்டருக்கு வந்து கபாலி படத்தை பார்த்தார்.